தேடல்!

Estimated read time 0 min read

Web team

IMG_20240308_085152_208.jpg

தேடல் ! கவிஞர் இரா .இரவி !

விடைதரும்

இணையத்தில்

தேடல் !

சாதனைக்கான

சாதனம்

தேடல் !

அறிவியல் வளர்ச்சி

அறிவியலாளர்களின்

தேடல் !

எந்த வயதிலும்

நடக்கட்டும்

தேடல் !

நாளைய விளைச்சலுக்கு

இன்றைய விதைப்பு

தேடல் !

தினமும்

கடமையாகட்டும்

தேடல் !

தொலைந்தவைகள் கிட்டும்

தொடருங்கள்

தேடல் !

கண்டுபிடிப்புகள்

கண்டுபிடிக்கக் காரணம்

தேடல் !

பெற்றுத்தரும்

வெற்றி

தேடல் !

வழி கிடைக்கும்

ஒளி பிறக்கும்

தேடல் !

Please follow and like us:

You May Also Like

More From Author