பச்சை நிலம்.

Estimated read time 0 min read

Web team

IMG_20240328_114717.jpg

பச்சை நிலம் ! கவிஞர் இரா .இரவி !

பச்சை நிலம் முன்பெல்லாம் இருந்தது
பச்சை நிலம் இன்று இங்கு பறிபோனது !

வீட்டடி மனைகளாக்கிப் பணம் சேர்த்தனர்
விளை நிலங்களை விடுகளாக்கி மகிழ்ந்தனர் !

எரிவாயு குழாய் பதிக்க நிலம் அபகரித்தனர்
எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தனர் !

மீத்தேன் எடுக்க என்று நிலம் பறித்தனர்
மீளமுடியாத சோகத்தை மக்களுக்குத் தந்தனர் !

ஆபத்தான அணு உலைகளை வைத்தனர்
அடுக்கடுக்காக எண்ணிக்கையை உயர்த்தினர் !

நவீன மருத்துவமனைக்கும் மட்டும் இங்கு
நிலம் இல்லை என்று வேறு மாநிலம் போனது !

குளிர்பான நிறுவனங்கள் எல்லாம் ஆற்று நீரை
கொள்ளையடிக்க அனுமதி வழங்கினர்!

சோலை வனங்களை பாலைவனம் ஆக்கினர்
சோர்வில் உழவனை நிலை குலைய வைத்தனர் !

பச்சையம் எல்லாம் பறிபோனது நிலத்தில்
பாலைவனத்திலும் மோசமானது நிலம் !

வெடிப்புகள் வெடித்து தரிசாகப் போனது நிலம்
வெறுப்புடன் உயிர் மாயத்தனர் உழவர்கள் !

கண்ணும் எட்டும் தூரம் வரை பச்சை அன்று
கண்ணும் எட்டும் தூரம் வரை வறட்சி இன்று !

சாலை போடுவதாகச் சொல்லிச் சாய்த்தனர்
ஆலை அமைக்க என்று சாய்த்தனர் மரங்களை !

பச்சை நிலம் நேரடியாகக் கண்டோம் அன்று
பச்சை நிலம் படத்தில் காண்போம் இன்று !

Please follow and like us:

You May Also Like

More From Author