பார்வையற்றவர்கள்

Estimated read time 0 min read

Web team

201708041058062102_Worlds-blind-population-to-triple-by-2050-study_SECVPF.gif

பார்வையற்றவர்கள் ! கவிஞர் இரா .இரவி !

புறப்பார்வை இரண்டு இல்லாவிட்டாலும்
அகப்பார்வை ஆயிரம் உடையவர்கள் !

வந்தவர் குரல் கேட்டவுடன்
வந்தவரின் பெயரை அறிவார்கள் !

பணத்தின் மதிப்பு என்ன என்பதை
பார்க்காவிடினும் விரலால் உணர்வார்கள் !

பாடல் வரிகள் மனனம் செய்து
பாடுவார்கள் வரி எதுவும் விடாமல் !

இசைக்கருவிகளை நுட்பமாக கையாண்டு
இனிமையாக இசை அமைப்பார்கள் !

மா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர்
மாற்றுத்திறனாளி மதுரைக்காரர் !

இசைக்குழுக்கள் அமைத்து நிகழ்வுகளில்
இன்னிசை விருந்து தருபவர்கள் !

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர்
அகவிழி உள்ள புறவிழி இல்லாத பழனியப்பன் !

பார்வையற்றோர் பலருக்கு ஏணி அவர் !
படிக்க வைத்து கரை சேர்க்கும் தோணி அவர் !

பலகுரல் நிகழ்ச்சியும் நடத்துவார்கள்
பல்வேறு திறமைகள் உள்ளவர்கள் !

கணினி இயக்கவும் கற்கிறார்கள்
கண் பார்வையின்றியே சாதிக்கிறார்கள் !

ஊன்றுகோல் தட்டியே உணர்வார்கள்
உயரம் பள்ளம் குச்சியால் அறிவார்கள் !

முதுநிலை பட்டம் கூட பெற்றுள்ளார்கள்
முத்திரைப் பதிக்கும் செயல்கள் செய்வார்கள் !

தன்னம்பிக்கை பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள்
தன்னம்பிக்கை சிகரமாக வாழ்கிறார்கள் !

பார்வையுள்ளவர்களில் சோம்பேறிகள் உண்டு
பார்வையற்றவர்களில் சோம்பேறிகள் இல்லை !

துன்பத்திற்கு துன்பம் தந்து திருக்குறள் வழி
இன்பமாய் வாழும் வல்லவர்கள் நல்லவர்கள் !

Please follow and like us:

You May Also Like

More From Author