பிரபஞ்சன் மறையவில்லை.

Estimated read time 0 min read

Web team

thumbnail_rrk2-2.jpg

பிரபஞ்சன் மறையவில்லை!
கவிஞர் இரா. இரவி.

******

புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர் பிரபஞ்சன்
பாரதிதாசன் வரிசையில் புகழினைப் பெற்றவர்!

கதைகளின் மூலம் வாழ்வியல் கற்பித்தவர்
கதாசிரியராக தனி முத்திரைப் பதித்தவர்!

தனக்கென தனி நடையை வகுத்துக் கொண்டவர்
தன்மையாக எல்லோருடனும் நன்கு பழகியவர்!

பல்வேறு இதழ்களில் தனித்தடம் பதித்தவர்
படித்தவர் பாராட்டிடும் எழுத்தாளராகத் திகழ்ந்தவர்!

பிரபஞ்சம் முழுவதும் அறியப்பட்ட எழுத்தாளர்
பிரபஞ்சன் என்றாலே தரம்எளிதில் விளங்கும்!

பகுத்தறிவுப் பகலவன் பற்றி கவிதைநூல் வடித்தவர்
பகுத்தறிவுச் சிந்தனைகளை படைப்புகளில் பதித்தவர்!

சிறுகதை நாவல் கவிதை பல்வகை வடித்தவர்
சிந்தனையை படைப்புகளில் நன்கு விதைத்தவர்!

மானுடம் வெல்லும் வரலாற்று நாவல் வடித்தவர்
மானுடம் சிறக்க படைப்புகளில் வலியுறுத்தியவர்!

எழுத்தாளர் மட்டுமல்ல நல்ல பேச்ச்சாளர் பிரபஞ்சன்
எடுத்த செயலை முடித்திடும் செயல்வீரர்!

பாரதியைப் போலவே வறுமையோடு போராடியவர்
போற்ற மறந்துவிடுகிறோம் வாழும் போதே!

சாதிமத வெறியை என்றும் சாடியவர்
சகோதரத்துவத்தை வாழ்வில் என்றும் பேணியவர்!

புகைப்பதால் புற்றுநோய் வரும் உணருங்கள்
புகைக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் இளைஞர்களே!

புகைப்பதை நிறுத்தியிருந்தால் நீண்டிருக்கும் வாழ்நாள்
புகையே பகையாகி வாழ்நாளை குறைத்தது!

உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்
உன்னதமான ஒப்பற்ற படைப்புகளில் என்றும் வாழ்வார்

Please follow and like us:

You May Also Like

More From Author