மலேசியத்தமிழர்!

Estimated read time 0 min read

Web team

IMG_20240304_121541_493.jpg

தமிழும் மலேசியத் தமிழரும்!
கவிஞர் இரா. இரவி.
******
மலேசியா நாடு போலவே இந்தியாவிலும்
மங்காத தமிழை ஆட்சிமொழி ஆக்கிடுவோம்!

மலேசியா நாட்டில் வாழ்ந்திட்ட போதும்
மலாய் மொழி அறிந்தாலும் தமிழை மறக்காதவர்கள்!

பெற்ற குழந்தைகளுக்கு மலேசியத் தமிழர்கள்
பைந்தமிழை நாளும் கற்பித்து வருகின்றனர்!

வருமானத்தில் ஒரு பகுதி தமிழுக்கு செலவழிப்பவர்கள்
வண்டமிழை வளர்ப்பதற்கு துணை நிற்பவர்கள் !

கருத்தரங்கம் நடத்தி தமிழை வளர்ப்பவர்கள்
கவியரங்கம் நடத்தி தமிழை வளர்ப்பவர்கள் !

தமிழோடு தமிழ்ப்பண்பாட்டையும் வளர்ப்பவர்கள்
தமிழர்களின் அடையாளத்தை என்றும் இழக்காதவர்கள் !

தமிழகத்திற்கு சுற்றுலாவாக வருகை தந்து
தமிழைப் பறைசாற்றி வருபவர்கள்!

நல்ல தமிழில் நாளும் பேசி வருபவர்கள்
நம்மைப் போல தமிங்கிலம் என்றும் பேசாதவர்கள் !

தமிழின் அருமை பெருமை அனைத்தும் அறிந்தவர்கள்
தமிழ் எனவே என்றும் செழித்து வாழ்பவர்கள்!

மலேசியத் தமிழர்களின் உயிர்மூச்சு தமிழ்
மலேசியத் தமிழர்களென தமிழகத் தமிழர்களும் மாறுவோம் !

உலகின் முதல்மொழி தமிழுக்கு மகுடம் சூட்டுவோம்
உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்த தமிழை வளர்ப்போம் !

மனிதன் தோன்றியபோது தோன்றிய மொழிக்கு
மண்ணில் மரியாதையை பெற்றுத் தருவோம்!

தமிழை அழியாமல் காப்போர் மலேசியத் தமிழர்
தமிழ்ப்பற்று மிக்கவர்கள் தமிழைப் போற்றுபவர்கள்!

புலம்பெயர்ந்த வலிமிகுந்த வாழ்க்கையிலும்
பண்டைத் தமிழை என்றும் மறக்காத பண்பாளர்கள்!

தேனீயைப் போல உழைத்திடும் உழைப்பாளர்கள்
தீந்தமிழ் வளர்ந்திட நாளும் உதவுபவர்கள்!

மலேசிய நாட்டின் ஆட்சிமொழி நம் தமிழ்
மலேசியர்கள் மிகவும் மதிக்கும் மொழி தமிழ்!

தமிழறிஞர்கள் மலேசியாவிற்கு வருகை தந்தால்
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்!

மலேசியத் தமிழர்கள் தந்த தமிழ்ச்சொற்கள்
மண்ணில் தமிழை வாழ்விக்கும் கொடைகள்!

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடத்தியவர்கள்
உலகத் தமிழர்கள் தொடர்பான கண்காட்சிகள் நடத்தியவர்கள்!

மலேசியாவை கட்டி எழுப்பியவர்கள் தமிழர்கள்
மலேசியா தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாதது தமிழ்!

இனஉணர்வுடன் தமிழ் உணர்வுடன் வாழ்வோர்
இனிய தமிழுக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்!

மலேசியாவின் அங்கமானது நம் சங்கத்தமிழ்
மலேசியத் தமிழர் உயிருக்கு மேலாக தமிழை மதிப்பவர்கள்!

Please follow and like us:

You May Also Like

More From Author