வாழ்க தமிழ்

Estimated read time 0 min read

Web team

ac3021547e95914f143090344c589077.jpg

தமிழ் படித்து வெல் தமிழா ! தலை நிமிர்ந்து நில் தமிழா ! கவிஞர் இரா .இரவி

தமிழ் படித்து வென்றவர்கள் கோடி அறிந்திடுக
தமிழால் சாதித்து நின்றவர்கள் கோடி புரிந்திடுக

அறிவியல் அறிஞர் அப்புதுல் கலாம் அன்றே
அழகுதமிழில் தொடங்கினார் கல்வியை நன்றே !

மயில்சாமி அண்ணாத்துரை தொடக்கக் கல்வியை
மனம் விரும்பி அழகு தமிழில்தான் தொடங்கினார் !

இன்றைய அறிவியல் அறிஞர் சிவன் படித்ததும்
இனியதமிழ் என்பதை அனைவரும் அறிந்திடுக !

பட்டிமன்ற நடுவர்கள் அனைவரும் பார்போற்றும்
புகழ் பெறக் காரணம் அவர்கள் கற்ற தமிழ் !

உலகில் தமிழ் ஒலிக்காத நாடே இல்லை
உலகம் முழுவதும் பேசப்படும் நம் தமிழ் !

தமிழ் படித்தால் தன்னம்பிக்கை நன்கு வளரும்
தமிழ் படித்தால் தமிழ்ப் பண்பாடு நன்கு விளங்கும் !

உலகத் தமிழர்கள் யாவரும் ஓரணியில் திரள்வோம்
ஒப்பற்ற தமிழ் படித்து சாதனைகள் பல புரிவோம் !

.

Please follow and like us:

You May Also Like

More From Author