விளம்பரம்.

Estimated read time 1 min read

Web team

விளம்பரம் ! கவிஞர் இரா .இரவி !

பூனையை யானை என்பார்கள் !
அதையும் மக்கள் நம்புவார்கள் !
———————–
முகம் வெள்ளையாகும் என்பார்கள் !
விற்று கருப்புப்பணம் சேர்ப்பார்கள் !
——————–
மூளைச்சலவை செய்து மக்களை
முட்டாளாக்கி பெரு முதலாளியாவர்கள் !
—————————–
வாசனை திரவியம் அடித்தால்
பெண்கள் வருவார்கள் என்று காட்டி
பெண் இனத்தை கேவலப் படுத்துவார்கள் !
—————————————-
தொலைக்காட்சிகளுக்கு வினாடிகளுக்கு
பணம் செலுத்தி விளம்பரம் செய்து
பொருளின் விலையில் ஏற்றுவார்கள் !
————————-
அடக்க விலை ஒரு ரூபாய்
விற்பனை விலை பத்து ரூபாய்
அமோக விற்பனை காரணம்
கிரிக்கெட் வீரர் குடிப்பார் !
—————–
நடித்த நடிகருக்கு வழங்கிய பணம்
பொருளின் விலையில் ஏறியது !
————-

Please follow and like us:

You May Also Like

More From Author