ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி

Estimated read time 0 min read

Web team

ddf5c69b-3aa8-4ab6-9fd5-ce5df71a7202-8688e0ad-59ff-4046-b9db-9971afac42c9_compressed_40.jpg

ஹைக்கூ!

கவிஞர் இரா. இரவி

இன்பம் துன்பம்
இரண்டும்
கடந்து போகும்!

உணர்க
இன்னல் இல்லாத
மனிதன் இல்லை!

யாருக்கும்
நிரந்தரமன்று
இன்பம்!

அறிந்திடுக
பணக்காரனுக்கும்
உண்டு கவலை!

உனக்கு மட்டுமல்ல்
உலகிற்கே உண்டு
இன்னல்!

இல்லறத்திற்குத் தேவை
பணம் மட்டுமல்ல
குணமும் தான்!

உடலை உருக்கும்
நோயை உருவாகும்
கவலை!

முயன்று தோற்பது தவறில்லை
இயலாமலே இருப்பது தான்
தவறு!

இரவு பகல்
இன்பம் துன்பம்
மாறாதது மாற்றம்!

சோகம்
அழிக்கும்
சுறுசுறுப்பு!

இன்பம் துன்பம்
இரண்டிலும் சமநிலை
உயர்நிலை!

வேதனை சோதனை
வாழ்க்கையில் உண்டு
கடந்து போகும்!

இரண்டும் தவறு
வெற்றிக்கான செருக்கு
தோல்விக்கான வருத்தம்!

உயர்பதவியில்
உள்ளவர்களுக்கும்
உண்டு கவலை!

இல்லவே இல்லை
உலகில்
கவலை இல்லாத மனிதன்!

துன்பத்தை மற
இன்பத்தை நினை
இனிக்கும் வாழ்வு

Please follow and like us:

You May Also Like

More From Author