ஹைக்கூ! கவிஞர்

Estimated read time 0 min read

Web team

2291.jpg

ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி! ஏரிகளில்
ஏறி நின்றன
கட்டிடங்கள் !
ஏக்கத்துடன் பார்த்தான்
மழைக்கு ஒதுங்கியவன்
பள்ளியை !
வருவதில்லை
சொத்துச் சண்டை
ஏழை வீட்டில் !
சிறுவனுக்கு வண்டியானது
நோண்டிய பின்
நுங்கு !
கற்பித்தது தாய்மொழி
புலம் பெயர்ந்தோருக்கு
வானொலி! குருதியோடு
உறுதியானது
தாய்மொழி !
வெறுப்பதில்லை
வண்டுகளை
மலர்கள் !
மரத்தைப் பிரிந்ததால்
சருகானது
இலை ! கடிக்காது
மிதிக்காமல்
பாம்பு !
ஒளிக்கும்
தென்றலுக்கும்
ஒரே சன்னல் !
குட்டிப்போடவில்லை
வருடங்கள் ஆகியும்
மயிலிறகு !
குட்டிப்போடவில்லை
வருடங்கள் ஆகியும்
மயிலிறகு !
வெட்டுதல் முறையோ
வாழும் வாழையை
திருமணத்திற்கு !
அகற்றினோம் பெயரிலிருந்து
அகற்றுவோம் மனதிலிருந்து
சாதி ! தேவை கவனம்
ஒவ்வொரு வினைக்கும்
உண்டு எதிர்வினை !
உடன் கிடைக்கும்
உற்று நோக்கினால்
கருப்பொருள் !
கட்டவேண்டியது
வழிபாட்டுத்தலங்கள் அல்ல
மனிதநேயம் !
தள்ளி வையுங்கள்
தவறான கற்பிதங்களை
வெண்மை மேன்மை !
இயற்கை மட்டுமல்ல
செயற்கையும் அழகுதான்
மலர்கள் !
காத்திருப்பதில்லை
யாருக்காகவும்
ஓடும் நதி !

Please follow and like us:

You May Also Like

More From Author