அடக்கடவுளே…! திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய மணமகள் மயங்கி விழுந்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் பகுதியில் ஒரு ஆடம்பரமான ரிசார்ட் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரேயா ஜெயின் (28) என்பவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றது. அந்த வகையில் மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மெஹந்தி விழாவின்போது ஸ்ரேயா நடனம் ஆடினார். அப்போது திடீரென அவர் சரிந்து விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது ஸ்ரேயா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர் இருதய நுரையீரல் பிரச்சினைகளால்  உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author