அரசு பள்ளியில் நூதன முறையில் லஞ்சம்…. மாணவர்களை டார்ச்சர் செய்யும் ஆசிரியர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் துடைப்பம், குப்பை தொட்டி, சாக்பீஸ் ஆகியவற்றை வாங்கி வர கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் அரசினர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிக்கு புதிதாக சேர வரும் மாணவர்களை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி துடைப்பம், குப்பை தொட்டி, சாக்பீஸ் வாங்கி வரச் சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இதுபோன்ற நடந்து கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் பள்ளிக்கு அடிப்படை பொருட்களை வாங்கி வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author