இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம்… நண்பனை சந்திக்க நேரில் சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலம் மீட் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நபர் ஒருவர் பழக்கமாகியுள்ளார். அந்த நபர் தான் வங்கியில் பணியாற்றுவதாக கூறி அறிமுகம் செய்து கொண்டார். இந்த இளம் பெண்ணுக்கும் வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவருக்கு உதவ முன்வந்துள்ளார். அந்த இளம் பெண்ணும் இதனை நம்பிய நிலையில் தன்னுடைய நண்பரை அனுப்பிய அந்த நபர் அவருடன் டேராடூன் நகருக்கு வரும்படி கூறியுள்ளார்.

அப்போதுதான் வேலை வாங்கி தர முடியும் என்று அவர் கூறிய நிலையில் இளம்பெண் அவரை சந்திக்கவில்லை. அதன் பிறகு உத்தரப்பிரதேசத்தின் தனபவன் பகுதிக்கு செல்லும்படி அந்த நபரின் கூட்டாளி இளம் பெண்ணிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் சென்ற நிலையில், அந்த நபர் இளம் பெண்ணை சந்தித்துள்ளார். பிறகு அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து அவரை ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவரும் அவருடைய நண்பரும் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author