இறைச்சி கடை நடத்திவந்த நபர் வெட்டிக்கொலை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இறைச்சிக் கடை நடத்தி வந்த நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணமநாயக்கர்பட்டி பகுதியை சேர்ந்த பிரசாந்த் எரிச்சநத்தம் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் குன்னூர் விளக்கு பகுதி அருகே இறைச்சிக் கடை போடுவதற்காக தமது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை வழிமறித்து சராமாரியாக வெட்டிவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரசாந்தின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author