உங்கள் ஆதாரில் எத்தனை சிம் கார்டு இருக்கிறது என தெரியணுமா?…. கண்டறிய இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உங்கள் ஆதார் கார்டில் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதற்கு முதலில் https://sancharsaathi.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று இரண்டாவதாக இருக்கும் சிட்டிசன் சென்ட்ரிக் சேவையை கிளிக் செய்ய வேண்டும் .

பிறகு உங்கள் மொபைல் எண் இணைப்பு என்பதை கிளிக் செய்து உள்ளே சென்ற பிறகு மொபைல் எண் மற்றும் கேப்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

மொபைல் எண்ணுக்கு பெறப்பட்ட ஓடிபி-ஐ  உள்ளிட வேண்டும்.

உள் நுழைந்த பிறகு உங்கள் ஆதார் மூலம் எத்தனை சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் பார்க்க முடியும்.

உங்களுடையது அல்லாத எண்களை  தடுக்கவும் அதில் வழிவகை உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author