காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வயதான தம்பதி போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்துக்கொண்டு வயதான தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனாட்சி நகரைச் சேர்ந்த தங்கராசு- விசாலாட்சி தம்பதி, தங்களது வளர்ப்பு மகனுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வளர்ப்பு மகன் கலையரசன், அவரது மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் வயதான தம்பதியை வீட்டிலிருந்து துரத்தியுள்ளனர்.

இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த தம்பதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குபின் போராட்டத்தை கைவிட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author