‘தமிழ் புதல்வன் திட்டம்’ ஆகஸ்ட் மாதம் தொடக்கம்

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000- வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த 43 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் வகுப்பறையை குழந்தைகளுக்கு பிடித்தபடி வண்ணமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல் சூழல் என எந்த தடையும் இருக்க கூடாது என்று தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000- வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author