நடைமேடையில் உறங்கிய நாடோடி குடும்பத்தினர்… இரவில் கேட்ட பயங்கர சத்தம்… 2 பேர் பலி… 7 பேர் படுகாயம்…!!!

நாக்பூர் மாநிலம் திகோரி பகுதியில் பொம்மை விற்பனை செய்யும் குடும்பத்தினர் அங்குள்ள நடைபாதையில் நேற்று முன் தினம் இரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நடைபாதையில் படுத்து உறங்கி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவத்தை தொடர்ந்து காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த நிலையில் இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்து கிடந்தனர். அது மட்டும் அல்லாமல் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நாடோடிகளான இவர்கள் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பிழைப்புக்காக நாக்பூர் வந்த நிலையில் பொம்மைகளை விற்றுவிட்டு இரவு நேரத்தில் நடை பாதையில் படுத்து தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அப்பாவிகளான அவர்கள் மீது கார் ஏறிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author