“நாகரிகம் வழியே பயணம்” சிறப்புக் கண்காட்சி

சீன ஊடகக் குழுமம் நடத்திய “நாகரிகம் வழியே பயணம்” என்ற சிறப்புக் கண்காட்சி அக்டோபர் 12ஆம் நாள் லண்டனில் துவங்கியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய் ஷியொங் இத்துவக்க விழாவில் காணொளி மூலம் உரைநிகழ்த்தினார்.

பிரிட்டனுக்கான சீனத் தூதரகப் பிரதிநிதிகள், பிரிட்டனுக்கான பன்னாட்டுத் தூதர்கள், புகழ் பெற்ற பிரிட்டன் நிபுணர்கள், அறிஞர்கள், மாணவர்கள் உட்பட, சுமார் 80 விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர்.


ஷென் ஹாய் ஷியொங் கூறுகையில், மனித சமூகம், 100 ஆண்டுகளில் கண்டிராத மாபெரும் மாற்றத்தைச் சந்திக்கிறது. உலக நாகரிக முன்மொழிவின் தலைமையில், சீன மக்கள், சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தைக் கட்டியமைத்து, மனித நாகரிக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சீன ஊடகக் குழுமம், ஊடகங்களின் கடமையைப் பின்பற்றி, சீன நாகரிகத்தைப் பரப்பி, சீன-ஐரோப்பிய மானிட தொடர்பை அதிகரித்து, நாகரிகப் பரிமாற்றத்தைத் தூண்டி, மனித பொது சமூகக் கட்டுமானத்துக்கு ஞானமும் ஆற்றலும் வழங்க விரும்புகிறது என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author