பிரபாஸ் பெயரில் மாற்றம்…. தொடர் தோல்வி தான் காரணமா….? வெளியான தகவல்….!!

Estimated read time 1 min read

பாகுபலி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமானவர் பிரபாஸ். இவர் மாருதி தசாரி இயக்கத்தில் நடிக்கும் புதிய படம் “தி ராஜாசாப்”. இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதனிடையே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக் குழுவினரால் வெளியிடப்பட்டது. போஸ்டரை பிரபாஸ் ரசிகர்கள் அங்கமங்கமாக பார்த்திருப்பார்கள் போல். போஸ்டரில் போடப்பட்ட பிரபாஸின் பெயர் எழுத்துக்களை வைத்து ஒரு செய்தி பரவி வருகிறது.

அதன்படி Prabhas தனது பெயரில் கூடுதலாக ஒரு S நியூமராலஜி படி சேர்த்துதான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் PRABHASS என்று போடப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. அதோடு தொடர் தோல்விகளால் தான் பிரபாஸ் தனது பெயரை நியூமராலஜி படி மாற்றி இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என்றும் பிரிண்டிங் தவறால் பிரபாஸ் பெயருடன் கூடுதலாக ஒரு S சேர்ந்து இருக்கலாம் என்றும் இதனை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author