பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் சோகம்….!!!

சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன், தெருநாய்களை கண்டதும் அவற்றிற்கு பிஸ்கட் போட்டுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவனை அந்நாய்கள் கடிக்கத் தொடங்கியுள்ளது.அப்போது  சிறுவன் அலறியபோதும் விடாமல் அவை கடித்துக் குதறின. இதையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author