மாநில அளவிலான செஸ் போட்டி- 521 வீரர்கள் பங்கேற்பு!

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 521 வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் 7, 9, 11, 12 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் முதியவர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.

7 சுற்றுகளாக நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த செஸ் போட்டி ஏற்பாட்டாளர் இஸ்மாயில், வயதானவர்களை சிறுவர்கள் எதிர்கொள்ளும்போது, தங்கள் திறமைகளை சிறுவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் செஸ் போட்டியை கட்டாயமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author