மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து!-15 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கொல்கத்தா சீல்டா இடையே செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் டார்ஜிலிங் அருகே சென்று கொண்டிருந்தது.

காலை 8:45 மணியளவில் ரங்கபானி ரயில் நிலையம் அருகே சென்ற போது சிக்னல் கிடைக்காததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது பின்புறம் வந்த சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியுள்ளது.

இதில் பயணிகள் ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

இதனிடையே விபத்தில் உயிரிழந்தோர் குடுமபத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய ரயில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்து நடைபெற்ற இடத்திற்கு மூத்த அதிகாரிகள் விரைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்வதற்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செல்லவுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author