மே மாத பொருள்களை ஜூன் இறுதிவரை பெறலாம்… தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரேஷன் கடைகளில் இந்த பொருள்கள் வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஜூன் மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் துவரம் பருப்பு, பாமாயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தங்கு தடை இன்றி வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரேஷன் கடைகளில் அரிசி தவிர்த்து இதர பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author