மே.வங்கம் ரயில் விபத்து…. காரணம் இது தானா?…. பரபரப்பு தகவல்….!!!

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததுதான் இந்த கோர விபத்திற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழித்தடத்தில் தானியங்கி சிக்னல்கள் உள்ள நிலையில் இரண்டு வழித்தடத்திலும் எப்போதும் ரயில்கள் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான வழித்தடம் ஆகும். வடகிழக்கு இந்தியாவை நாட்டின் ஏனைய பகுதிகளை இந்த வழித்தடம் தான் இணைக்கின்றது. தற்போது ரயில் விபத்தை தொடர்ந்து அந்த வழியாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author