விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல்…. நாதக அழைப்பு…!!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடும் நிலையில் வருகின்ற வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இது குறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள செய்தியில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் அபிநயா, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் பேரில் வருகின்ற ஜூன் 20ம் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டம் மற்றும் தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அனைத்து பாசறைகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் காலை 8 மணிக்கு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள திருமலைசாமி மண்டபத்தில் ஒன்று கூட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author