ஹவில்தார் பழனி நினைவாக நடந்த மாரத்தான் போட்டி!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராணுவ வீரர் ஹவில்தார் பழனியின் நினைவாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்திய – சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனி வீர மரணம் அடைந்தார்.

அவரது தியாகத்தை நினைவுகூறும் விதமாக, சேது சீமை பட்டாளத்தின் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author