50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை…. வாட்ஸ் அப் மூலம் 100 பெண்களை ஏமாற்றி…. அடைத்து வைத்து அரங்கேறிய கொடூரம்..!!

பீகார் மாநிலத்தில் 50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை தருவதாக கூறி வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு 100 இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் முஷாபூரில் பெண்களை பெல்டால் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒன்பது பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவால் இந்த சம்பவமானது தற்போது அம்பலமாகியுள்ளது. முஷாபூர் அருகே அஹியார்பூர்  என்ற இடத்தில் பெண்களை அடைத்து வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author