இந்தியன் 2 : நாளை மட்டும் 5 காட்சிகள்!  

Estimated read time 1 min read

டாப் ஹீரோக்களின் ரசிகர்கள் சிலர் அதிகாலை காட்சிகளில் செய்யும் செயல்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, கடந்த 3 வருடங்களாக தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.
குறிப்பாக 5 மணி, 6 மணி சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்துள்ளது.
இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு, கோரிக்கைகளின் பேரில் காலை 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறது.
இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழக்க வேண்டும் என லைகா சார்பாக தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நாளை ஒரு நாள் மட்டும், காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author