என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன் – பார்த்திபன்

Estimated read time 1 min read

டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக ‘டீன்ஸ்’ என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து வரும் பார்த்திபன் இந்த படத்தை எந்த மாதிரி கதையை வைத்து இயக்கி இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.

இந்த திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே தினத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படமும் வெளியாக இருக்கிறது.

இந்த சுழலில், ‘டீன்ஸ்’ படத்தினை தைரியமாகவே பார்த்திபன் வெளியிட முடிவெடுத்து இருப்பது இந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், ஜூலை 12-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலையை பார்த்திபன் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அதாவது டீன்ஸ் படத்தை பார்க்கவேண்டும் என்றால் 100 ரூபாய் இருந்தால் போதும். டிக்கெட்டின் விலை 100 ரூபாய் மட்டும் தான் என்றும், இது ஒரு சில நாட்களுக்கு மட்டுமே எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது “என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன். எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை.

ஆனால் டீன்ஸ் (TEENZ) படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.100/- மட்டுமே. இதில் நட்டமே இல்லை, வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே” என கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் மிகவும் மகிழ்ச்சி , உங்கள் டீன்ஸ் படம் நிச்சயம் வெற்றி பெறும்.

உங்கள் படைப்புகளின் அதீத மீது நம்பிக்கை உண்டு என கூறி வருகிறார்கள்.

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன் | TEENZ from July 12th in Cinemas Worldwide@immancomposer @dopgavemic @k33rthana@GenauRanjith@lramachandran@AdithyarkM

@Iam_Nithyashree@shreyaghoshal@Arivubeing@iYogiBabu@onlynikil@j_prabaahar@shrutihaasan@CVelnambipic.twitter.com/aoyFJtDVDF

— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 8, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author