கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கண்டிஷன் போட்ட எச்.வினோத்?

Estimated read time 1 min read

சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. விஜய் கோட் படத்தில் பிஸியாக இருந்த காரணத்தால் இன்னும் தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

கோட் படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படம் வெளியான பிறகு தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த சூழலில், இயக்குனர் எச்.வினோத் சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்தாராம். அப்போது சிவகார்த்திகேயன் எச்.வினோத்திடம் தனக்கு எதாவது கதை இருக்குமா? என்பது போல கேட்டாராம்.

அதற்கு இயக்குனர் எச்.வினோத் கதை ஒன்றை கூற, அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். ஆனால், எச்.வினோத் சிவகார்த்திகேயனுடன் கண்டிஷன் ஒன்றையும் போட்டாராம். அது என்னவென்றால், நான் இப்போது விஜயின் அடுத்த படத்திற்கான வேளைகளில் இருக்கிறேன். அதை முடித்த பிறகு தனுஷ் வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறேன்.

இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு தான் உங்களை வைத்து என்னால் இயக்கமுடியும். அதற்கு இடையில் திடீரென என்னை அஜித் அழைத்து படம் செய்ய சொன்னார் என்றாலும் கூட நான் அங்கு சென்றுவிடுவேன் என் மீது நீங்கள் வருத்தப்படக்கூடாது என்று கண்டிஷன் போட்டுவிட்டாராம். இதன் காரணமாக சிவகார்த்திகேயன் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். இந்த தகவலை சினிமா யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 23-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கண்டிஷன் போட்ட எச்.வினோத்? appeared first on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author