கார்த்திக்கு சகோதரியாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா

Estimated read time 1 min read

நடிகர் கார்த்தி, ’96 படப்புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங், காரைக்குடி மற்றும் கும்பகோணம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இப்படத்தில், நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.
இதில் அவருக்கு கார்த்திக்கு சகோதரி வேடம் என கூறப்படுகிறது.

முன்னதாக ஸ்ரீதிவ்யா 2017இல் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொர’ படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர், சமீபத்தில் வெளியான ‘ரைட்’ படத்தில் நடித்தார்.

கார்த்தி 27 படத்திற்கு ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.vஇப்படம், ‘சிங்க் சவுண்ட்’தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக இதே தொழில்நுட்பம், கார்த்தி நடிப்பில் வெளியான ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இப்படத்தில், அரவிந்த்சுவாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author