சத்யராஜ் குறித்து குஷ்பூ ஓப்பன் டாக்..!

Estimated read time 0 min read

தமிழ் சினிமாவில் கடந்த 1980களின் பிற்பகுதியில் தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமானவர் குஷ்பூ. அடுத்து, நவரச நாயகன் கார்த்திக் உடன் நடித்த வருஷம் 16 என்ற பாசில் இயக்கிய படம், அவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத் தந்தது.

குஷ்பூ

தொடர்ந்து பல படங்களில் நடித்த குஷ்பூ, பி வாசு இயக்கிய சின்னதம்பி படத்துக்கு பிறகு, தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி, முதலிடத்தில் இருந்தார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு என முன்னணி நாயகர்களுடன் நடித்தார்.

இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக்கொண்ட நிலையில், 2 பெண் பிள்ளைகளின் தாயான நிலையில், குஷ்பு 54 வயதிலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பாஜகவில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனது நடிப்பு அனுபவங்கள் குறித்து நடிகை குஷ்பூ பேசுகையில், பல சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.

பிரம்மா படம்

குஷ்பூ கூறுகையில், சத்யராஜ் கவுண்டமணி மனோரமா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து விட்டார்கள் என்றால் அங்கே ஒரு பிரளையமே வந்துவிடும். அந்த அளவுக்கு காமெடி செய்வார்கள்.

நான் சத்யராஜூடன் நடித்த படம் பிரம்மா. இந்த படத்தில் ஒரு பக்கம் சத்யராஜ், மற்றொரு பக்கம் கவுண்டமணி. அந்த பக்கம் மனோரமா ஆச்சி. என்னோட நிலைமையை நினைச்சு பார்க்கவே முடியாது.

எனக்கு அவங்க பேசற லாங்க்வேஜ் அப்போ புரியாது. அவங்களோட சேர்ந்து நான் நடிக்கணும். அந்த எக்ஸ்பீரியன்ஸ் ரொம்ப முக்கியம். அவங்க கிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருந்தது.

அவங்க ஷாட் முடிச்சப்புறம் வெளியே போக மாட்டாங்க. அப்போ கேரவன் கிடையாது. கவுண்டமணி எப்படி நடிக்கறாங்க, ஆச்சியம்மா எப்படி நடிக்கறாங்க, சத்யராஜ் எப்படி நடிக்கறாங்கன்னு ஒருத்தரை ஒருத்தர் வந்த பார்ப்பாங்க. கவனிப்பாங்க.

ஏன்னா அப்புறம் அதுக்கு அவங்க ரியாக்சன் கொடுத்து நடிக்கணும்.

கேமராவுக்கு முன்பு காமெடி செய்வதை காட்டிலும்.. கேமராவுக்கு பின்பு அவர்கள் செய்யக்கூடிய காமெடிக்கு அளவே இருக்காது.. அங்கே நான் இருப்பதை கூட மறந்து காமெடி செய்து கொண்டிருப்பார்கள்.

என்னது பொண்ணா..?

என்னை கண்டுக்க கூட மாட்டாங்க.. இருந்தாலும்.. நான் வம்படியா சென்று . ஏம்ப்பா நான் இங்க ஒரு பொண்ணு இருக்கிறேன்.. இப்படி எல்லாம் பேசுகிறீங்களேன்னு கேட்பேன்..

அப்போ.. என்னது பொண்ணா..? ஏம்ப்பா இங்க ஏதோ பொண்ணு இருக்காம் பார்த்து சொல்லுங்கப்ப்பா.. என சத்யராஜ் கலாய்ப்பார்.

என்னை ஒரு பொண்ணா கூட அவர்கள் பார்க்கவில்லை.. அந்த அளவுக்கு காமெடி கலார் என படப்பிடிப்பு தளமே கலகலவென இருக்கும் என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருக்கிறார் நடிகை குஷ்பூ.

Please follow and like us:

You May Also Like

More From Author