ஜெயிலர் 2 படத்திற்கு ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Estimated read time 1 min read

ஜெயிலர் 2 : இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 2ஆம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் நெல்சன் அறிவித்தார்.

இந்நிலையில், ஜெயிலர் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த ‘ஹுக்கும்’ பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து, ஜெயிலர் 2ம் பாகத்திற்கு அந்த பெயரைத்தான் வைக்க படக்குழு  திட்டமிட்டுள்ளனராம். தற்பொழுது, ஜெயிலர் 2 படத்தின் திரைக்கதை பணியை இயக்குநர் நெல்சன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கானப் பணிகளை தொடங்கியுள்ள அவர், கூலி படத்திற்கு பிறகு ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஒரு படத்திற்கு ரூ.210 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்திற்கு அதை விட அதிகமாக கேட்டுள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஒரு தகவலின் படி, ரூ.250 கோடி கேட்டிருப்பார் என சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம், இருக்க இயக்குனர் நெல்சனுக்கு ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு, கேட்டதை விட சம்பளத்தை கூட்டி கொடுப்பதாக சொல்லப்பட்டது.

அதன்படி, ஜெயிலர் படமும் வெற்றியை பெற்று வசூலில் மூன்று மடங்கு லாபத்தை பெற்று கொடுத்ததன் அடிப்படையில், அவருக்கு சம்பளம் ப்ளஸ் Porsche கார் கிப்டாக அளிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல், சென்னையில் அவருக்கென ஒரு தனி ஆஃபீஸ் அமைத்து கொடுத்திருப்பதாக சொல்லபடுகிறது. இப்போது, இரண்டாம் பாகத்திற்கும் காம்ப்ரமைஸ் பேசியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author