தனுஷின் ‘ராயன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா அறிவிப்பு.!

Estimated read time 1 min read

இசை வெளியீட்டு விழா : நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் “ராயன்” படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூலை 26ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் 6ஆம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. தனுஷ் ரசிகர்களுக்கு இது கொண்டாட்ட நேரமாகும். வாத்தி திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு பின், தனுஷ் ராயன் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The countdown begins!

Get ready for the stellar #RaayanAudioLaunch on July 6th. #RaayanAudioLaunch coming soon on Sun TV@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravananpic.twitter.com/qN0n2js79p

— Sun Pictures (@sunpictures) July 4, 2024

இப்படத்தின் கதையானது சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் பழிவாங்கும் கதை என்று சொல்லல்படுகிறது.  தனுஷ் எழுதி இயக்கியுள்ள இப்படம், நடிகராக அவரது 50வது படமாகும். 2017ல் வெளியான பா.பாண்டி படத்துக்கு பிறகு தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தை ராயன் குறிக்கிறது.

இந்த படத்தில், தனுஷை தவிர பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி சரத்குமார், சுந்தீப் கிஷன், சரவணன் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் உள்ளனர்.

The post தனுஷின் ‘ராயன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா அறிவிப்பு.! appeared first on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author