தனுஷ் இயக்கும் ‘ராயன்’திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Estimated read time 1 min read

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படத்திற்கு ‘ராயன்’ என்று சில நாட்களுக்கு முன் பெயரிடப்பட்டது.
இதற்கு முன், ‘பவர் பாண்டி’ என்ற காதல் படத்தை இயக்கி இருந்த தனுஷ், தற்போது அதிரடி வன்முறை படத்தில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன் இப்படத்தின் பெயரையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ‘ராயன்’ படக்குழு வெளியிட்டது.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது துஷாரா விஜயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author