நா ரெடி தான் வரவா.. அமெரிக்காவில் ஒலித்த விஜய்யின் பாடல்..! (வீடியோ)

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.

இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில், லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது. இதனிடையே, படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் உள்ள பல திறமையாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியான America’s Got Talent நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து பலரும் பங்கேற்று உள்ளனர். அந்த வரிசையில், பிரபல நடன Trop பங்கேற்றுள்ளது. லியோ படத்தில் இடம் பெற்ற நான் ரெடி தான் பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடிய அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

THIS IS THE TRUE VALUE OF ROCKSTAR ANIRUDH pic.twitter.com/FRvG3wssb6

— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 13, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author