புதிய தொழிலில் கல்லா கட்டும் நடிகை சினேகா…

Estimated read time 1 min read

புன்னகை அரசி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை சினேகா 2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. திருமணம், குழந்தை பிறப்பிற்கு பிறகு சில ஆண்டுகள் பிரேக் விட்டிருந்த சினேகா பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

கிடைக்கும் ரோல்களில் நடித்து ஸ்கோர் செய்து வருகிறார். தற்போது தளபதி 68 படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். 42 வயதாகும் சினேகா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சினேகா ” ஸ்நேகாலயாஸ் சில்க்ஸ்” என்ற பெயரில் புதிய பிசினஸ் ஒன்றை துவங்கியுள்ளார். பட்டு சேலை விற்பனையான அதில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வித விதமான ஆஃபர்களுடன் தள்ளுபடியில் சேலைகளை விற்பனை செய்கின்றனர்.

அதுமட்டும் அல்லாமல் சினேகா என்ற பிராண்ட் நேமிற்காகவே ” ஸ்நேகாலயாஸ் சில்க்ஸ்” கடையை தேடி படையெடுக்கிறார்கள் பெண்கள் கூட்டம். இதனை, தொழில் துவங்குய வேகத்தில் சினேகா கல்லா கட்டி வருவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் தன்னுடைய பிஸினஸிற்கு தானே விளம்பரம் செய்துக்கொள்கிறார் சினேகா. அழகான புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார் சினேகா.

Please follow and like us:

You May Also Like

More From Author