புஷ்பா 2-வில் நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Estimated read time 1 min read

புஷ்பா 2-வில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கலக்கி கொண்டு இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே புஷ்பா முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு கூட ஒரு அட்டகாசமான போஸ்டரும் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் , படத்தில் நடிகை நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த புஷ்பா 2 படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பளமாக 3 லிருந்து 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புஷ்பா முதல் பாகத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா சம்பளமாக 1 கோடிக்கு மேல் வாங்கி இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது புஷ்பா 2வில் நடிக்க அவர் சம்பளமாக 5 கோடி வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author