மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அஜித்; வைரலாகும் புகைப்படங்கள்

Estimated read time 0 min read

நடிகர் அஜித்குமார் மற்றும் அவர் குடும்பத்தினர், ஆத்விக் அஜித்குமாரின் 9வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ஆத்விக் தீவிர கால்பந்து ரசிகர். சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் தொடரை காண அவரை, ஷாலினி அழைத்து சென்ற புகைப்படங்கள் அப்போது வைரலானது

இந்த நிலையில், அவரது பிறந்தநாள் அன்று, அவருக்கு பிடித்தமான கால்பந்து தீமில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது.
பிறந்தநாளுக்காக வெட்டப்பட்ட கேக்கும், அலங்காரத்திற்காக ஒட்டப்பட்ட பலூன்களும் புட்பால் வடிவத்தில் இருந்தது.

அதோடு, பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்திருந்த பேனரில், ரொனால்டினோ, டேவிக் பெக்காம் போன்ற கால்பந்து ஜாம்பவான்களுக்கு மத்தியில் ஆத்விக்கின் போட்டோவும் இருக்குமாறு எடிட் செய்து வைத்திருந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author