மறைந்த திரையிசை பாடகி பவதாரணிக்கு இசையாஞ்சலி

Estimated read time 0 min read

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தேசிய விருது பெற்ற மறைந்த திரைப்பட பாடகி பவதாரணிக்கு இசையாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

பூங்குயில் பதிப்பகம் சார்பில் பாலுடையார் தெரு வீனஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்விற்கு அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ். தளபதி தலைமை தாங்கினார். நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனுவாசன் முன்னிலை வகித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். தொழிலதிபர் அ.ஜ. இஷாக் தொடக்கவுரை ஆற்றினார்.
ஸ்ரீராகம் இசைப் பயிற்சி மைய தபேலா இசைக் கலைஞர் ஜேம்ஸ் இந்துஸ்தானி தனி ஆவர்த்தனம் நிகழ்த்தினார்.

மேலும் ஜான் லாரன்ஸ், ஜெனிபா ஆகியோர் பங்கேற்று பவதாரிணி பாடிய திரையிசை பாடல்களை இசையாஞ்சலியாக செலுத்தினர்.
முனைவர் பேராசிரியர் உ.பிரபாகரன், கவிஞர்கள் வந்தை குமரன், கேப்டன் பிரபாகரன், கு. சதானந்தன், சு. தனசேகரன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.


புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த தகவல்களை வழூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்தன், ஹோமியோபதி டாக்டர் அ. சரவணன் ஆகியோர் பகிர்ந்தனர்.
பவதாரிணி பற்றிய நினைவு சிந்தனைகளை எக்ஸ்னோரா மலர் சாதிக், தலைமை ஆசிரியர் க. வாசு, அரிமா இரா. சரவணன், மாம்பட்டு பெ. பார்த்திபன் ஆகியோர் பகிர்ந்தனர்.

வீனஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ரமேஷ் கண்ணா நிறைவுரை ஆற்றினார். பூங்குயில் டி.எல். சிவக்குமார் நிகழ்வை தொகுத்து, நன்றி கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author