26-ஆவது ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழா இன்று துவக்கம்

Estimated read time 0 min read

26ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 14ஆம் நாள் துவங்கியது. சீனத் திரைப்பட நிர்வாகம், சீன ஊடகக் குழுமம், ஷாங்காய் மாநகராட்சி அரசு ஆகியவை இணைந்து நடத்தும் இவ்விழா 14ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை 10 நாட்கள் நீடிக்கும்.
திரைப்பட நகரம் என்பது நடப்புத் திரைப்பட விழாவின் தலைப்பாகும்.

105நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3700க்கும் அதிகமான திரைப்படங்கள் இதில் போட்டியிட விண்ணப்பித்துள்ளன. அவற்றில் முதன்முறை திரையிடப்படும் படங்களின் எண்ணிக்கை 38ஐ எட்டியுள்ளது.
இந்த எண்ணிக்கையானது வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியுள்ளது.

ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவின் சர்வதேச செல்வாக்கு மென்மேலும் உயர்ந்துள்ளதை இது வெளிக்காட்டியுள்ளதாக ஷாங்காய் சர்வதேசத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மையத்தின் இயக்குநர் சென்குவோ தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author