4 வது நாளின் ‘லவ்வர்’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

Estimated read time 0 min read

லவ்வர் மற்றும் லால் சலாம் திரைப்படமும் பிப்ரவரி 9 அன்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு பாக்ஸ் ஆபிஸில் மோதியது. இதில், ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இருந்தாலும், லவ்வர் திரைப்படத்துக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கிய ‘லவ்வர்’ படத்தில் மணிகண்டன் உடன் கௌரி பிரியா ரெட்டி மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மணிகண்டனின் முந்தைய வெற்றிப் படமான குட் நைட் படத்தை ஆதரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவ்வர் படத்தையும் தயாரித்துள்ளனர். டாக்சிக் காதலில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்தப் படம் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

தற்போது, லவ்வர் படம் நான்கு நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் நான்கு நாட்களில் ரூ. 3.12 கோடிக்கு மேல் வசூலித்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நாளை தினம் காதலர்கள் தினம் என்பதால், விரைவில் இப்படத்துக்கு முதலீடு செய்த பணத்தை மீட்டெக்கும் என்று நம்பப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author