ஃபுகுஷிமா அணு உலையில் நிகழ்ந்த விபத்தில் ஜப்பானின் பொய் கண்டுபிடிப்பு

ஜப்பானிய செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஜப்பானின் டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் நவம்பர் 2ஆம் நாள் ஃபுகுஷிமா அணு உலையில் கதிரியக்க நீரின் 3ஆம் கட்ட வெளியேற்றத்தைத் தொடங்கியது.

இக்கட்டத்தில் சுமார் 7800டன் கதிரியக்க நீர் கடலில் வெளியேற்றப்படும்.
அதில் கதிரியக்கப் பொருட்களில் ஒன்றான ட்ரிடியத்தின் செறிவு எதிர்பார்ந்ததற்கு ஏற்றதாக உள்ளது என்று இந்த நிறுவனம் கூறியது.

ஆனால், ஒரு வாரத்துக்கு முன்பு, ஃபுகுஷிமா முதலாவது அணுஉலையில் கதிரியக்கத் திரவம் தெறித்து விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியது. அவ்விபத்தின் போது 2 பணியாளர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

பல மணிநேர சிகிச்சைக்குப் பிறகும் கூட, அவர்களின் தோலில் காணப்பட்ட கதிர்வீச்சு தாக்கமானது, பாதுகாப்பான நிலையை எட்டவில்லை. மேலும், இவ்விபத்தில் தெறித்த திரவத்தின் மொத்த அளவு, தொடக்கத்தில் வெளியிட்ட 100 மில்லி லிட்டரை விட, பல பத்து மடங்கு அதிகமாக இருந்தது.


தொழில்நுட்பத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் “பாதுகாப்பானது” என்றும், அணு கதிரியக்க நீரை சுத்திகரிக்கும் செயல்முறை “பாதுகாப்பானது” மற்றும் “நம்பகமானது” என்றும் ஜப்பான் கூறியுள்ளது.

ஆனால், ஜப்பான் தரப்பு உருவாக்கிய பொய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இவ்விபத்திலிருந்து உணரப்படுகின்றது. இதனிடையில் விபத்தின் போது தெறித்த கதிரியக்க திரவத்தின் மொத்த அளவு குறித்து ஜப்பான் டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முன்பும் பின்பும் முரண்பாடுகள் இருப்பதால், இந்நிறுவனத்தில் பாதுகாப்பான செயல்பாட்டுக்கான மேலாண்மை மீதான சந்தேகம் வெளியுலகத்தில் மீண்டும் எழுந்துள்ளது.

ஜப்பான் அரசைச் சேர்ந்த அமைச்சகங்களுக்கும் நிறுவனங்களுக்குமிடையில் பயனுள்ள ஒருங்கிணைப்பு பற்றாக்குறை உள்ளது. இதற்குக் காரணங்களில் ஒன்றாகும் என்று ஃபுகுஷிமா மாநிலத்தின் நெருக்கடி மேலாண்மைத் துறையின் பொறுப்பாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author