அதிக உற்பத்தி’என்ற சாக்குப்போக்கில் பாதுகாப்புவாதத்துடன் செயல்படும் அமெரிக்கா

சீனாவின் புதிய ஆற்றல் துறையின் வளர்ச்சி, மேலை நாடுகள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை நனவாக்குவதற்கு உதவி வருவதோடு, உலகளாவிய எரியாற்றல் மாற்றத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகின்றது என்று உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் அமீன் நாசர் குறிப்பிட்டுள்ளார்.

26ஆவது உலக எரியாற்றல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
சீனாவின் ‘அதிக உற்பத்தி’, உலகச் சந்தையில் தாக்கம் ஏற்படுத்தும் என்ற கருத்துப் பிரச்சாரத்தை அமெரிக்காவிலுள்ள சிலர் தீவிரமாக்கி வருகிறது.

அதேவேளையில், அமீன் நாசரின் இந்தக்கருத்து, சர்வதேச சமூகத்தில் பகுத்தறிவு மற்றும் புறநிலை புரிதலைப் பிரதிநிதிப்படுத்துகிறது.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது ஒன்றே பொருளாதார வளர்ச்சியின் நோக்கமாகும்.

உலக நாடுகளைப் பொறுத்த வரை, சீனாவின் புதிய ஆற்றல் உற்பத்தித் திறன், வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வரும் என்றே கருதுகின்றன.

தொடர்புடைய தரவுகளின்படி, 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலத்தில், சீனாவில் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, உலகளவில் 60 விழுக்காட்டளவை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துள்ள நாடாக சீனா விளங்குகிறது.


அமெரிக்க தரப்பினால் கூறப்பட்ட ‘அதிக உற்பத்தி’எனும் சாக்குப்போக்கு வெல்ல முடியாதது. பல சர்வதேச பிரமுகர்களின் கருத்துக்களின்படி, இச்சாக்குபோக்கின் மூலம், அமெரிக்கா பாதுகாப்புவாதம் என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டு, உலக ஆற்றல் மாற்றத்தின் முன்னேற்றப் போக்கிற்கு தடையாக அமையும்.

Please follow and like us:

You May Also Like

More From Author