“அதிக உற்பத்தி திறன்” பிரச்சாரத்தைத் தீவிரமாக்குவதற்குக் காரணம் என்ன?

Estimated read time 0 min read

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஏப்ரல் 24ஆம் நாள் தனது சீனப் பயணத்தைத் தொடங்கினார்.

இப்பயணத்தின் போது, புதிய ஆற்றல் துறையில் சீனாவின் “அதிக உற்பத்தி திறன் ” பிரச்சினை குறித்து அவர் கவனம் செலுத்துவதாக அமெரிக்க தரப்பு பயணத்தின் முன் தெரிவித்தது.
உலகின் பல்வேறு நாடுகளின் நடைமுறையைப் பார்க்கும் போது, குறிப்பிட்ட தொழில் துறைகளில் ஒரு நாட்டின் உற்பத்தி திறன, உள்நாட்டுத் தேவையைத் தாண்டுவது போன்ற நிலை பொதுவாகக் காணப்படுகிறது.

எனவே, அதன் ஏற்றுமதி இயல்பானது. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா தயாரித்த சில்லுகள், ஜெர்மனி தயாரித்த வாகனங்கள் முதலியவற்றின் 80 சதவீத அளவு, ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகின் மிக பெரிய புதுப்பிக்கவல்ல ஆற்றல் சந்தை மற்றும் சாதனத் தயாரிப்பு நாடாக, சீனாவின் உற்பத்தி திறன், உலகத்துக்கு அவசரத் தேவையாகும்.

சீனாவைச் சேர்ந்த தரமுள்ள பொருட்கள், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.
அரசியல் பார்வையில், இவ்வாண்டு அமெரிக்க பொது தேர்தல் நடைபெறவுள்ளது. வாகனத் தொழிலைத் தலைமை தொழிலாகக் கொண்டு, பொது தேர்தலுக்கான முக்கிய மாநிலமான மிச்சிக்கன் மாநிலத்தில், அமெரிக்க அரசுத் தலைவர், சீனாவின் மின்சார வாகனங்களுக்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்தார். அதனால், “அதிக உற்பத்தி திறன்” என்பது, அமெரிக்க பாதுகாப்புவாதத்துக்குச் சாக்குப்போக்கு ஆகும்.

அதுவும், வாக்குகள் மற்றும் தன்னலங்களை ஈட்டும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.
குறைந்த செலவில் தரமுள்ள சீனாவின் புதிய எரியாற்றல் பொருட்கள் உள்நாட்டுச் சந்தையில் நுழைவதைத் தடுக்கும் செயல், அமெரிக்க நுகர்வோரின் நலன்களைச் சீர்குலைப்பதோடு, உலகின் பசுமை மாற்றம் மற்றும் புதிய தொழில்களின் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என்று அமெரிக்கர்கள் சிலர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author