அமெரிக்காவின் காரணமற்ற குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு: சீனா

செப்டம்பர் 7ஆம் நாள் நடைபெற்ற கிழக்காசிய உச்சிமாநாட்டில், தைவான், தென் சீனக் கடல் முதலிய பிரச்சினைகள் குறித்து அமெரிக்கப் பிரதிநிதி ஒருவர் சீனா மீது காரணமின்றி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் பதிலளிகையில், அமெரிக்கப் பிரதிநிதி உண்மையைப் பொருட்படுத்தாமல், சீனா மீது காரணமின்றி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனைச் சீனா உறுதியாக எதிர்ப்பதோடு, ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. அதோடு, அமெரிக்கத் தரப்புக்குச் சீனா கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கின்றது என்றார். 

தைவான் பிரச்சினை, சீனாவின் உள் விவகாரமாகும். தைவான் நீரிணையின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்க வேண்டுமானால், தைவான் சுதந்திரத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும்.

தவிரவும், தென் சீனக் கடலில் இப்பிரதேசத்தைச் சேராத சில நாடுகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நடத்தி, பகைமையை ஊக்குவித்து, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைச் சீர்குலைத்து வருகின்றன. தென் சீனக் கடலில் நடத்தைக் கோட்பாடுகளுக்கான ஆலோசனைகளை நடத்த, ஆசியான் நாடுகளுடன் சேர்ந்து சீனா ஆக்கப்பூர்வமாக விரைவுபடுத்தி வருகிறது. தென் சீனக் கடல் விதிகளை ஆலோசனை செய்து, இப்பகுதியின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதில் இப்பிரதேசத்திலுள்ள நாடுகளின் முயற்சிகளுக்கு இப்பிரதேசத்தைச் சேராத நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் என்றார். 

Please follow and like us:

You May Also Like

More From Author