அமெரிக்காவின் சதிக்கு இந்தியச் செய்தி ஊடகங்களின் கவலை

வங்காளத்தேசம், மியன்மார் மற்றும் இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் கிறிஸ்தவ மத நாடு ஒன்றை நிறுவ அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனம் சதி செய்துள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் 13ஆம் நாள் வெளியிட்ட கட்டுரைகளில் சந்தேகம் தெரிவித்தன.


வங்காளத்தேச தலைமையமைச்சர் ஹசினா அம்மையார் மே திங்கள் இறுதியில் கூறுகையில், வங்காளத்தேசத்தில் வான் படை தளம் ஒன்றை புதிதாக கட்டியமைப்பதற்கு அனுமதித்தால், இவ்வாண்டு ஜனவரி திங்கள் நடைபெற்ற பொது தேர்தலில் தனக்கு தொல்லையை ஏற்படுத்த மாட்டோம் என்பதை வெள்ளையர் ஒருவர் முன்மொழிந்திருந்தார். ஆனால் தாம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

வங்காளத்தேசம் மற்றும் மியன்மாரிலிருந்து ஒரு இடத்தை பிரித்து, அங்கே கிழக்கு திமோர் போன்ற கிறிஸ்துவ நாட்டை நிறுவ குறிப்பிட்ட நபர் சதிசெய்தார் என ஹசினா தெரிவித்ததாக வங்காளத் தேச செய்தி ஊடகம் தெரிவித்தது.
Goa Chronicle என்னும் இந்தியாவின் செய்தி ஊடகம் வெளியிட்ட விமர்சனக் கட்டுரையில், ஹசினா அம்மையார் குறிப்பிட்ட வெள்ளையர் அமெரிக்கர் என்றும், ஹசினா அம்மையாரின் கூற்று, வங்காளத்தேசம் மற்றும் மியன்மாருடன் தொடர்புடையதாக இருந்த போதிலும், தற்போது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையினால், மேலும் பரந்துபட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை இது வழங்க வேண்டி இருக்கிறது.

குகி (Kuki) மக்கள், ட்சின் (Chin) மக்கள் மற்றும் மிட்சோ (Mizo) மக்கள், பொது பண்பாடு மற்றும் மத சங்கிலியைக் கொண்டு, மேலதிக தன்னாட்சியை நாடி வருகின்றனர். அவர்களைப் பொறுத்த வரை ஓர் ஒருமைப்பாடுடைய கிறிஸ்துவ நாடு அதிக ஈர்ப்பு ஆற்றல் கொண்டுள்ளது. நெடுநோக்கு ரீதியில் இந்த சதி இந்தியாவுக்கு அறைகூவலாக அமையும்.

இப்பிரதேசத்தின் பதற்ற நிலைமையைத் தீவிரமாக்கி, உள்ளூர் சக்திகளின் புனரமைப்புக்கு இது வழிகாட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் என்றாலும் சரி வங்காளத்தேசம் என்றாலும் சரி இந்தியாவின் அண்டை நாடுகளின் உள் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது, விளைவை ஏற்படுத்தும். அமெரிக்காவின் புவியமைவு அரசியல் விளையாட்டு மீது இந்தியாவுக்கு பரிச்சயம் இல்லை. கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகள் வரை, வட கிழக்கு இந்தியாவில் உள்ள கலக்காரர்களுக்கு அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனம் ஆயுதங்களை வழங்கி வந்திருந்தது. மியன்மாரின் குகி-ட்சின் கலக்காரர்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்கள் ஆவர். அவர்களுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவு, இந்தியாவைப் பொறுத்த வரை பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகும். ஏனெனில் வட கிழக்கு இந்தியாவில் ஏராளமான கிறிஸ்துவர்கள் வாழ்கின்றனர் என்று வங்காளத் தேசத்தின் மக்கள் கூட்டணி தலைவர் அஹமது ஹானின் கூற்றை மேற்கோள் காட்டி First post எனும் இந்தியச் செய்தித்தாள் கட்டுரையில் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author