அமெரிக்காவின் மனித உரிமை: சிறப்புரிமை மற்றும் ஆதிக்கம் தான்

அமெரிக்காவில் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுகாதார ஆய்வகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, சுமார் 60 விழுக்காட்டு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பல்வகை துப்பாக்கி வன்முறையை எதிர்நோக்குகின்றனர்.

உண்மையில், இது, அமெரிக்காவில் மனித உரிமைப் பிரச்சினைகளின் ஒரு சிறிய பகுதியாகும். அமெரிக்க அரசியல்வாதிகள் பணம் மற்றும் அரசியல் லாபத்தை நாடுவதன் காரணமாகவே, துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்து ஒருமித்த கருத்துக்களை எட்ட இயலவில்லை. இதன் விளைவாக, அமெரிக்க மக்கள் தங்கள் உயிரை இதற்கான விலையாக கொடுக்க நேரிடுகிறது.

அதே வேளையில், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் சிலருடன் ஒப்பிடும் போது, பெரும்பாலான மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் மனித உரிமை, சிலரின் சிறப்புரிமையாக மாறியுள்ளது.

ஏழை,பணக்காரர் இடைவெளி, 1929ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பின், மிகவும் கடுமையான நிலையை நோக்கிச் சென்றுள்ளது. அமெரிக்காவில் நீண்டகாலமாக பிரபலமாகியுள்ள பண அரசியல் மற்றும் கட்சிகளிடையேயான சண்டை, சமூகத்தில் பிரிவினை ஆகியவை, அமெரிக்க மக்கள் நம்பிக்கையை இழந்து வருவதற்கு முக்கியக் காரணங்களாகும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க பாணியிலான மனித உரிமை,  உள்நாட்டில் சிலர் மட்டும் அனுபவித்துக் கொள்ளும் சிறப்புரிமையாகவும், வெளிநாட்டில் செலுத்தி வரும் ஆதிக்க அதிகாரமாகவும் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author