அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் வாங்யீ சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், மத்திய கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான வாங்யீ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை 19ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.


சந்திப்பின் போது வாங்யீ வலியுறுத்திக் கூறுகையில், சீனா பற்றி தவறான கருத்துக்களைக் கொண்டதால், சீனா மீது தவறகான கொள்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள நேரிட்டது.

இது இரு நாட்டுறவு மந்த நிலைக்குள்ளாகிய மூலக் காரணம். சீன-அமெரிக்க உறவை நிலையாக வளர்க்க, ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி, பஞ்ச சீலக் கோட்பாடுகள் ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.


மேலும், சீன அச்சுறுத்தல் என்று பரப்புவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். சீனா மீதான சட்டவிரோதமான ஒரு சார்பு தடை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தடுப்பைக் கைவிட வேண்டும்.

சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது. சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளில் உறுதி செய்யப்பட்ட ஒரே சீனா என்ற கோட்பாட்டில் அமெரிக்கா உண்மையாக ஊன்றி நிற்க வேண்டும். சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டை மதித்து “தைவான் சுதந்திரத்தை” உறுதியாக எதிர்க்க வேண்டும் என்று வாங்யீ கோரிக்கை விடுத்தார்.


அமெரிக்காவின் கருத்துக்களையும் பிளிங்கன் அறிமுகப்படுத்தினார். பாலி தீவு உச்சிமாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்கள் உறுதி செய்த நிகழ்ச்சி நிரல்களுக்கு மீண்டும் திரும்ப அமெரிக்கா விரும்புகிறது.

சீனத் தரப்புடன் பரிமாற்றத்தை வலுப்படுத்திக் கருத்து வேற்றுமைகளைப் பொறுப்புடன் சமாளித்து இரு தரப்புக்குமிடையே கூட்டு பலன் கொண்ட துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் பிளிங்கன் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author