இணையப் பாதுகாப்பு பிரச்சினையைப் பயன்படுத்தி சீனா மீது அவதூறு பரப்புவதற்குச் சீனா எதிர்ப்பு

 

ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை கூறுகையில், “APT40” என்ற இணைய திருடர், இந்தோ-பசிபிக் பிரதேசத்தைச் சேர்ந்த அரசுகளின் மீது பல முறைகளாக கள்ளத்தனமாக தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து முதலிய நாடுகள் இந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஒப்புக்கொண்டுள்ளன. இணைய பாதுகாப்பு பிரச்சினையைப் பயன்படுத்தி தொடர்புடைய தரப்புகள் சீனா மீது அவதூறு பரப்பியுள்ளன. இதை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் 9ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

லின் ஜியான் கூறுகையில், அண்மையில், அமெரிக்காவின் APT அமைப்பின் ஆய்வு அறிக்கைகள் உள்ளிட்ட பல விசாரணை அறிக்கைகளைச் சீனாவின் தொடர்புடைய நிறுவனங்கள் வெளியிட்டன. நீண்டகாலமாக தவறான தகவல்களை அமெரிக்கா பரப்பி வருவது, சீனாவின் இணையத் தாக்குதல் அச்சுறுத்தல் கருத்தை வேண்டுமென்றே பரப்புரை செய்வது ஆகியவை அந்த அறிக்கைகளில் விரிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா அதன் மேலாதிக்க நிலை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி, உலகெங்கிலுள்ள ரகசியங்களைத் திருட்டும் வகையில், இணையக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என இந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

Please follow and like us:

You May Also Like

More From Author